சொத்து வரி உயர்வை கண்டித்து குடியாத்தத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து குடியாத்தம் தாலுகா அலுவலகம் எதிரே வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குடியாத்தத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சொத்துவரி உயர்வை கண்டித்து குடியாத்தம் தாலுகா அலுவலகம் எதிரே வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமை தாங்கினார்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சி.எம்.சூரியகலா, ஜி.லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் வி.ராமு, டி.சிவா, சீனிவாசன், பிரபாகரன், சுரேஷ், ஆனந்தன், ராகவன், மாவட்ட பொருளாளர் ஜி.பி.மூர்த்தி, குடியாத்தம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் எம். பாஸ்கர், எஸ்.அமுதா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டு சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
முடிவில் மாவட்ட துணை செயலாளர் ஆர்.மூர்த்தி நன்றி கூறினார்.