பிரச்சாரம் செய்த திமுக நபர் மீது தாக்குதல்
ஆட்டோ மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நபரை பிரச்சாரம் செய்யக்கூடாது என தாக்கிய அதிமுக பிரமுகர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் பரிதா என்பவரும், தி.மு.க சார்பில் அமமு விஜயன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் அந்த அந்த கட்சிகளின் பிரமுகர்கள் ஆட்டோக்கள் மூலம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியம் புத்தூர் பகுதியில் திமுகவினர் ஆட்டோ மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அதிமுக பிரமுகர் சார்லஸ் என்பவர் தங்கள் பகுதியில் திமுக பிரச்சாரம் மேற் கொள்ளக்கூடாது எனக்கூறி தடுத்துள்ளார்.
மேலும் மைக்கை பிடித்து வம்பு செய்தவர் ஆட்டோவில் பேசிய நபரை தாக்கவும் செய்துள்ளார். பிரச்சாரம் செய்ய வந்த நபரை தாக்கிய அதிமுக நபரின் இத்தகைய போக்கு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து பேர்ணாம்பட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.