அப்துல்கலாம் நினைவுநாளில் 500 மரக்கன்றுகள் வழங்கிய குடியாத்தம் ஆட்டோ ஓட்டுனர்கள்

குடியாத்தம் நகரை பசுமையாக்க அப்துல்கலாம் நினைவு நாளில் 500 மரக்கன்றுகள் வழங்கிய ஆட்டோ ஓட்டுனர்கள்

Update: 2021-07-27 15:45 GMT

குடியாத்தம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது 

குடியாத்தம் பழைய பேருந்து நிலைய அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அப்துல் கலாம் நினைவு தினத்தை போற்றும் வகையில் .500 மரக்கன்றுகள் கொடுத்து நகரை பசுமை வழியில் கொண்டு செல்ல திட்டமிட்டு அதன்படி குடியாத்தம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கினர்.

புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் ஆகியோர்களுக்கும் மரக்கன்றுகள் வழக்கினர்.

மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மரக்கன்று வழங்கும் நிகழ்வை அறிந்து திருநங்கைகள் மற்றும் நரிகுறவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் மரக்கன்றுகளை பெற்று சென்றனர். இதன் மூலம் நகரை பசுமையாக மாற்றும் திட்டம் வெற்றி பெறும் எனவும் அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News