மருத்துவமனை புதிய கட்டிட பணிகள் துவக்கம்

பேர்ணாம்பட்டில் ரூ.7 கோடியே 58 லட்சம் மதிப்பிலான புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2021-02-26 11:31 GMT

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில், சிறுபான்மை இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் சிறந்த மருத்துவ சேவையை உருவாக்கும் நோக்கத்தில் ரூ.7 கோடியே 58 லட்சம் மதிப்பில் 22000 சதுர அடியில் இரண்டு அடுக்கு புறநோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளையும், மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் ரூபாய் 2 கோடியே 23 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுமானப் பணிகளையும், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலழகன், இணை இயக்குனர் மருத்துவப் பணிகள் மரு.செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News