தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் எதிராக செயல்படுகின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் சட்டமன்ற தொகுதி சென்றாயன் பள்ளியில் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது தகவல் தொழில்நுட்பம் தற்போது நமது வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒரு அத்தியாவசியமாக மாறிவிட்ட இந்த தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்கட்சிகள் நமக்கு எதிராக செய்கின்ற பிரச்சாரங்களை முறியடித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க நீங்கள் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஆகியோரிடம் கேட்டுக்கொண்டார். அப்போது அவர் பேசும்போது கோவிட் பாதிப்பினால் நலிவடைந்த மக்களுக்காக குடும்ப அட்டைகளுக்கு ரூபாய் 2500 வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போன்று விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்றவர்கள் பயனடைவார்கள். மழை மற்றும் கோவிட் பாதிப்பினால் விவசாயம் பாதிக்கப்பட்டதற்காக இதை பாராட்டாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பரிகாசம் செய்கிறார். என்று பேசினார் விழா நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்து இருந்தார்.