வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு மட்டுமே அனுமதி

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர் மற்றும் முகவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்

Update: 2022-02-21 11:45 GMT

வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர் சந்திப்பின் போது

நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும்,

பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தபால் ஓட்டுக்களை பிரித்து எண்ணுவதற்காக சிறப்பு முகவர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்ட பின்பு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இரண்டையும் சேர்த்து தான் அறிவிக்கப்படும் தனித்தனியாக அறிவிக்கப்படாது.

வேலூர் மாநகராட்சி பொருத்தவரை 15 மேசைகள் போடப்பட்டு 18 சுற்று வாக்குகள் எண்ணப்படும்.  வாக்கு எண்ணும் மையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி முகவர்கள் மற்றும் வேட்பாளர்களை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்கும் எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது.

வெற்றி பெரும் வேட்பாளர்கள் பொதுமக்களுக்குத் தொந்தரவு இல்லாமலும் கொரானா தொற்று கருத்தில் கொண்டு கொண்டாட்டங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News