வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 27 ம்தேதி வரை புதுப்பிக்கலாம்;

Update: 2021-07-28 05:45 GMT

வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் தங்கள் பதிவை புதுப்பிக்க வரும் ஆகஸ்ட் 27 ம்தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித் துள்ளது .

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து தங்கள் பதிவை அதற்கான கால இடை வெளியில் புதுப்பிக்க தவறுபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு வழங்கப்படுகி றது .

அதன்படி கடந்த 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து தங்கள் பதிவை புதுப்பிக்க தவறிய வேலூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த படித்த இளைஞர்கள் வரும் ஆகஸ்ட் 27 ம் தேதிக்குள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் . இத்தகவலை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News