அணைகட்டு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பரப்புரை

எடப்பாடி, மோடி இருவரையும் அகற்ற திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று அணைகட்டு திமுக வேட்பாளர் நந்தகுமா ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பேச்சு

Update: 2021-03-17 08:18 GMT

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஏ.பி.நந்தகுமாரை ஆதரித்து அணைகட்டு, ஊசூர், ஒடுக்கத்தூர் ஆகிய பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்.  கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று இந்திய அளவில் பெரிய கட்சியாக உள்ளது. இதை பொறுக்கமுடியாமல் மோடி தமிழகம் மீது பயங்கர கோபத்தில் உள்ளார். ஜி.எஸ்டி-யை உயர்த்தி பல தொழில்களை முடக்கியுள்ளனர். ஓ.பி.எஸ்-ம், ஈ.பி.எஸ்-ம் மோடியிடம் தமிழகத்தை அடகு வைத்துவிட்டார்கள். கொஞ்சம் அசந்தால் தமிழகத்தை மோடிக்கு விற்றுவிடுவார்கள்.

தமிழத்தின் முன்மாதிரி தொகுதியாக அணைகட்டு உள்ளது. 234 தொகுதியிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். இதுவரை என் மீது 22 வழக்கு உள்ளது. ஜெயலலிதா எப்படி இறந்தார் என ஓட்டு கேட்க வரும் அதிமுகவினரிடம் நீங்கள் கேட்க வேண்டும். சசிகலா காலையே வாரிவிட்டவர்கள் இவர்கள். நீங்கள் அதிமுகவுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க மோடிக்கு போடும் ஓட்டு. பா.ஜ.க வை இந்திய அளவில் எதிர்க்கும் ஒரே கட்சி தி.மு.க.

தற்போது  பா.ஜ.கவினர் செவிலியர் படிப்புக்கும் நுழைவு தேர்வு வைத்துள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம். 3-ம் வகுப்புக்கும் நுழைவு தேர்வு வைத்துள்ளனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம், முதியோர் உதவி தொகையை முற்றிலும் ஒழித்து விட்டார்கள்.

கிராமமாக இருந்த அணைகட்டை நகரமாக மாற்றியுள்ளோம். அணைகட்டு தொகுதியில் சொந்த செலவில் குடிமாராமத்து பணியை செய்துள்ளோம். டெல்லியில் உள்ள அமாவாசை மோடி, தமிழகத்தில் உள்ள அமாவாசை எடப்பாடி ஆகிய 2 அமாவாசையை அகற்ற வேண்டும்.

கேஸ், பெட்ரோல் விலையேற்றத்திற்கு போராடியதாலா சசிகலா தியாகத்தலைவி ஆனார்? தூத்துக்குடியில் பட்டப்பகலில் 14 பேரை சுட்டுக்கொன்ற ஆட்சி அதிமுக ஆட்சி. பொள்ளாச்சி சம்பவத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என கூறினார். 

Tags:    

Similar News