பணம் பட்டுவாடா: அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கைதான அரசு பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்.
நேற்று முன்தினம் இரவு வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதி தெள்ளூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க இருந்ததாக தெள்ளூரை சேர்ந்த ராமமூர்த்தி(57), அலமேலுரங்காபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திபன்(51) ஆகியோரை பிடித்த பறக்கும்படையினர் அவர்களிடம் இருந்து 17 ஆயிரம் மற்றும் தி.மு.க வேட்பாளர் (நந்தகுமார்) மற்றும் கட்சி சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பணப்பட்டுவிடாவில் ஈடுபட்ட அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த கார்த்திபன்(51) அரசு பேருந்து நடத்துனராக உள்ளார். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றதால் நடத்துனர் கார்த்திபனை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.