பாஜவுடன் கூட்டணியால் தேர்தலில் தோல்வி: அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு
வேலூர், ஊசூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட் டத்தில், பாஜவுடன் கூட் டணி வைத்ததால் தேர்தலில் தோல்வியடைந்தோம் என நிர்வாகிகள் குற்றச்சாட்டு;
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்ட மன்ற தொகுதி வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஊசூரில் நடந்தது .
புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் . கூட்டத்தில் , உள்ளாட்சி தேர்தலுக்கு நிர்வாகிகள் இப்போதே தயாராக வேண்டும் , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்களிடம் தொலைபேசி உள்ளிட்டவைகள் மூலம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பன பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
முடிவில் நன்றி உரை கூறி முடிக்கும் போது கட்சி நிர்வாகிகள் சிலர் அவர்களுடைய குறைகளை முன் வைத்து பேசினர் . அப்போது , பலர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாகவே கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம் . வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சி மேலிடம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றனர் .
இதையே பலரும் சரி என கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . பின்னர் அவர்களை மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சமரசம் செய்தனர் .