எருது விடும் விழா: காளை முட்டியதில் முதியவர் பலி

பென்னாத்தூர் அருகே எருது விடும் விழாவில் காளை முட்டியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.;

Update: 2021-02-24 08:25 GMT

வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தில் நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது. சீறி பாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். சிலர் மாடுகளை கைகளால் தட்டினர். அப்போது மாடு முட்டியதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் இடையன் சாத்து புதிய காலனியை சேர்ந்த செல்வம் (வயது 62) என்ற முதியவரை காளை முட்டியத்தில் தூக்கி வீசப்பட்டார்,  இதனால் அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மீட்டு அடுக்கம் பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வேலூர் தாலுக்கா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News