வேலூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டு பயின்ற மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கடந்த 2017-2018-ம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச லேப்டாப் இதுவரை வழங்கவில்லை என்றும், இதனால் தாங்கள் கல்லூரி மேற்படிப்பை தொடர்வதில் சிரமம் இருப்பதாகவும். மேலும் தங்களுக்கு முந்தைய மற்றும் அடுத்த பேட்ஜ் மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 2017-2018 பேட்ஜ்க்கு மட்டும் லேப்டாப் வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டால் உரிய பதில் கிடைகக்கவில்லை. ஆகவே தங்களுக்கு அரசு வழங்கும் இலவச லேப்டாப்பை வழங்க கோரி வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகள் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.