அரியர் தேர்வுக்கு மீண்டும் பணம் செலுத்த முடியாது என கூறி வேலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் தர்ணா பேராட்டம் நடத்தினார்கள்.
கொரோனா ஊரடங்கின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரியருக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தினால் அத்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அரியர் தேர்வினை எழுத வேண்டும் என்றும், அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கூறியிருந்த நிலையில் அரியர் தேர்வுக்கான கட்டணத்தை மீண்டும் செலுத்த முடியாது என கூறி வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் லதா மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.