ஆவணங்கள் இல்லாத ரூ.4 லட்சம் பறிமுதல்
ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.;
வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மக்கான் சிக்னலில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த பா.ம.க வேலூர் மத்திய மாவட்ட தலைவர் புருசோத்தமன் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும், மேலும் பா.ம.க கட்சி துண்டு, அக்கட்சி தலைவர்களின் படங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் அணைகட்டு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் அதிமுக சின்னம் பொறிக்கப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. கண்காணிப்பு குழுவினர் அவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்து அதிமுக மற்றும் பா.ம.க ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த 3 பேரை பிடித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.