வேலூரில் மேசையை உடைத்த பள்ளி மாணவர்கள் சஸ்பெண்ட்

தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேசைகளை உடைத்து அட்டகாசம் செய்த 10 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

Update: 2022-04-25 10:16 GMT

வேலூரில் பள்ளி இரும்பு மேசையை அடித்து உடைக்கும் மாணவர்கள்

வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளியில், சுமார் 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு தொடங்கியதால், கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி விடப்பட்டிருக்கிறது. அப்போது 12-ம் வகுப்பு சி பிரிவு மாணவர்கள் சிலர் வீட்டுக்குச் செல்லாமல் வகுப்பறையிலேயே அட்டகாசம் செய்துள்ளனர். ஆசிரியர்கள் வீட்டுக்கு செல்லும்படி அறிவுறுத்தியும் அதை சற்றும் பொருட்படுத்தாத மாணவர்கள், வகுப்பறையில் இருந்த இரும்பு மேசைகளை அடித்து உடைத்தனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினர் பள்ளிக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேலூர் கோட்டாட்சியர்  பூங்கொடி, வட்டாட்சியர் செந்தில், மாவட்ட கல்வி அதிகாரி  சம்பத் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து மேசையை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட 10 மாணவர்களையும் பள்ளியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர்  குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News