தமிழகத்திற்கு மேலும் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி : சென்னை வந்தடைந்தது

தமிழகத்திற்கு மேலும் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது.

Update: 2021-06-20 01:45 GMT

சென்னை விமான நிலையம் வந்த கொரோனா தடுப்பூசி.

தமிழகத்திற்கு மேலும் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 26 பாா்சல்கள் விமானத்தில் புனேவிலிருந்து சென்னை வந்தடைந்தது.

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி தேவைப்படுகின்றன.எனவே தமிழ்நாடு அரசே மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி,நேரடியாக தடுப்பூசி கொள்முதல் செய்கிறது. .

இந்நிலையில் நேற்று புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 3,10,150 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 26 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன.

சென்னை விமானநிலைய லோடா்கள் அந்த தடுப்பூசிகள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து கீழே இறக்கினா்.அதன்பின்பு தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் விமானநிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் ஏற்றி,சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனா்.அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News