வந்தவாசியில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்;
வந்தவாசியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் தலைமையில், வந்தவாசி தெற்கு வட்ட காவல் ஆய்வாளர் திரு.R.குமார், உதவி ஆய்வாளர் திரு.S.ராஜ்ஜெயக்குமார் மற்றும் காவலர்கள், வந்தவாசி கெஜலட்சுமி நகர், இரட்டை வாடை செட்டி தெருவில் நடத்திய சோதனையில், ரவி என்பவரின் வீட்டில் சோதனையிட்டனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,49,248/- மதிப்புள்ள 278கிலோ 450கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரவியை கைது செய்து, வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.