பருவதமலையில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் சிக்கினார்

பருவதமலையில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை பக்தர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

Update: 2022-03-11 01:55 GMT

கலசபாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பருவதமலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாத பவுர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர்.  இந்த நிலையில்  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் பருவத மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அங்கேயே தங்கி உள்ளார். இன்று அதிகாலை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் திடீரென விழித்து பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவருடைய பெயர் சண்முகம் (வயது 21) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News