திருவண்ணாமலை அருகே பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழப்பு
சேத்துப்பட்டு அருகே பாம்பு கடித்து இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள செவரபூண்டி, மதுர கருங்கல்மேடு, கிராமத்தை, சேர்ந்தவர் தர்மராஜ், இவரது மகள் திவ்யா( 19).
இவர்12- ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் உள்ளார்.திவ்யா கடந்த மாதம் 28ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திவ்யாவை விஷப் பாம்பு ஒன்று கடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று திவ்யா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுகுறித்து திவ்யாவின் உறவினர் தினேஷ், சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.