கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு வார்டுகளை பழையபடி மாற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர்.

Update: 2022-02-01 14:14 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்.

கண்ணமங்கலம் பேரூராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில், 1,2 மற்றும் 3 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதன் காரணமாக 4,5 மற்றும் 15 ஆக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெண்கள் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பிச்சைமுத்து, சிவகாமி ஆகியோர் தலைமையில் இன்று கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது வார்டுகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழையபடியே 1,2 மற்றும் 3 வார்டுகளாக மாற்றவேண்டும் என கூறினர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தரணி மற்றும் போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

பின்னர் கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம், தங்கள் பகுதி வார்டுகளை மீண்டும் பழையபடி மாற்றவேண்டும் என பெண்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மீண்டும் வார்டுகளை மறுவரையறை செய்யும்போது இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என அவர் கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து அம்பேத்கர் நகர் பகுதி பெண்கள் கூறுகையில், எங்கள் வார்டுகளை பழையபடி மாற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

Tags:    

Similar News