திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update: 2024-08-06 02:00 GMT

பள்ளி முன் தேங்கியுள்ள மழை நீர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம், போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர், ஜடதாரிகுப்பம், ஜமுனா மரத்தூர் ,பெலாசூர், பாடகம், அணியாலை, வசூர், குன்னத்தூர், இரெண்டேரிப்பட்டு, மாம்பட்டு, கரைப்பூண்டி, வெண்மணி, திண்டிவனம் உள்ளிட்ட கிராமங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து இருந்து நிலையில் இரவு நேரத்தில் திடீரென தூரல் மழை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

கலசபாக்கம் பகுதியில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது அதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பொழுது தொடர்ந்து நேற்று முன்தினம் நேற்று ஆகிய இரண்டு தினங்களாக தொடர்ந்து சூறாவளி காற்று போல் காற்றுடன் கூடிய மழை ஒரு மணி நேரமாக பெய்து வருவதால் விவசாயிகள் இந்த சம்பா பயிர் செய்வதற்கு தைரியமாக பயிரிடலாம் என்று நம்பிக்கையுடன் விவசாயிகள் மழையை வரவேற்றனர்.

வகுப்பறை முன்பு மழை நீர் தேங்குவதால் பள்ளி மாணவர்கள் அவதி.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாயிலில் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் அரசு உயர்நிலைப்பள்ளி வாயிலில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக பள்ளியின் வாயிலிலும் வகுப்பறை கட்டிடங்களுக்கு முன்பும் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளி வரும் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர் உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் என்பதே பெற்றோர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு 

ஜமுனாமரத்தூர் போளூர் சாலையில் இரவு கனமழையின் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தீயணைப்பு துறை மூலம் அகற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஜமுனாமுத்தூர் போளூர் வனச்சாலையில் இரவு கன மழையின் காரணமாக பட்டறை காடு கிராமத்தில் சாலையின் குறுக்கே பெரிய மரம் விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அதனை அகற்ற தீயணைப்பு துறை சிறப்பு நிலை அலுவலர் முருகன் தலைமையில் பணியாளர்கள் வனச்சரக அலுவலர்கள் சாலையில் விழுந்த மரத்தை அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்தனர்.

Tags:    

Similar News