போளூர் ரயில்வே மேம்பால பணிகள் எப்போதுதான் முடியும்? பொதுமக்கள் கேள்வி

போளூர் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-30 03:41 GMT

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஆமை வேகத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 2014 ஆம் ஆண்டு போளூர் ரயில்வே மேம்பாலம் குறித்து சட்டசபையில் அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேலாக பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

தற்போது ரயில்வே கேட்டில் இரண்டு புறமும் மேம்பால பணிகள் முடிவு பெற்றுள்ளது.

மேலும் ரயில்வே துறையினரால் ரயில்வே டிராக் இருக்கு மேல் அமைக்கப்பட்டு வரும் பாலப்பணிகளும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்படும் பாலங்களை இருபுறமும் இணைக்கும் பணிகளும் மற்றும் இரண்டு புறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகளும் செய்ய வேண்டியுள்ளது. இந்த மூன்று பணிகளுமே தற்போது தொய்வடைந்த நிலையில் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. இதனால் போளூர் பகுதி பொதுமக்கள் மத்தியில் இப்பணிகள் தொடரப்படுமா என குழப்பமே ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் 7.35 கோடி மதிப்பில் பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அமைப்பதற்கும் நெடுஞ்சாலை மூலம் கட்டப்பட்ட பாலங்களையும் ரயில்வே துறையினரால் கட்டப்பட்டு வரும் பாலத்தை இணைப்பதற்கும் தனியாக டெண்டர் விடப்பட்டது உடனடியாக பூஜைகள் போடப்பட்டு பணிகளும் துவக்கப்பட்டது. அப்பகுதியில் நிலம் எடுக்கப்பட்ட இடங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டது தற்போது அந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

முதலில் பாலத்தை இணைக்கும் பணி தான் நடைபெறும் என்றும் சர்விஸ் சாலைகள் பின்னர்தான் போடப்படும் என்றும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதால் அப்பகுதி வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர் இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது சர்வீஸ் சாலையில் கால்வாய் அமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர் பின்னர் தான் மேம்பாலம் இணைக்கும் பணி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில்வே மேம்பால பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி கோட்ட பொறியாளர் மருத்துவ விடுப்பில் உள்ளதாலும், தற்போது வேறு ஒருவர் இதற்கான பொறுப்பில் உள்ளதாலும் பணியின் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் இந்த பணி தாமதமாவதால் போளூர் பக்கத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து போடும் நகருக்குள் வந்து செல்கின்ற பொதுமக்கள் வியாபாரிகள் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளும் நகருக்குள் வந்து திரும்ப சிரமம் இருப்பதால் வெளியே சென்று புறவழிப் பாதையில் செல்வதாலும் கால விரயம் ஏற்படுகிறது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் பல்வேறு தரப்பட்ட பொதுமக்களும் பயணிகளும் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் பள்ளி வாகனங்களும் புறவழி சாலையை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனை குறித்து தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது போளூர் நகரத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினை எதுவென்று கேட்டால் அனைவரும் ஒருமித்த குரலோடு சொல்வது மேம்பால பிரச்சனை தான் என்று சொல்லும் அளவிற்கு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வந்த தலைவலர்கள் அனைவரும் சொன்ன விஷயம் ரயில்வே மேம்பான பணிகளை விரைவில் முடிக்க முயற்சிப்போம் என தெரிவித்து சென்றுள்ளனர்.

நெடுஞ்சாலை துறை அமைச்சர் சட்டசபையில் அறிவித்த போது கூட 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது 20சதவீத பணிகள் இன்னும் பாக்கி என்றும் தெரிவித்து இருந்தார் .

கடந்த ஒரு வருடமாகவே அந்த 20சதவீத பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது ஏன் ரயில்வே மேம்பாலும் வேண்டும் என கோரிக்கை வைத்தோம் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும்படி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து உடனடியாக மேம்பால பணிகளை நிறைவேற்றி தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News