போளூர் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

போளூர் அருகே வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-04 02:00 GMT

கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை நடத்தும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார்

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்காக, ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, போளூரை அடுத்த மண்டகொளத்தூா் கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலராகப் பதவி வகிப்பவா் இருளப்பன். இவா், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க வட்டக் கிளையின் தலைவராக உள்ளாா்.

அதே ஊரைச் சேர்ந்தவா் அண்ணாமலை மகன் கணேசன். இவா், கடந்த 2023-ஆம் ஆண்டு இலவச வீட்டு மனை கோரி, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருந்தாா்.

இதன் பேரில், கிராம நிா்வாக அலுவலா் இருளப்பன்  விசாரணை நடத்தி, கணேசன் அவருடைய மனைவி முனியம்மாள் இருவருக்கும் தலா 3 சென்ட் என 6 சென்ட் நிலத்துக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, கிராம நிா்வாக அலுவலா் இருளப்பன், இரு மனைப் பட்டாக்களுக்கும் சேர்த்து தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.80ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கணேசனிடம் கேட்டதாகத் தெரிகிறது.

இதனால் அதிா்ச்சியடைந்த கணேசன் திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகனை அணுகி விவரத்தை சனிக்கிழமை காலை கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 40ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கணேசன் கிராம நிா்வாக அலுவலகத்தில் வைத்து இருளப்பனிடம் வழங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் இருளப்பனை கைது செய்தனா். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். 

Tags:    

Similar News