போளுரில் பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி

போளூர்‌ அரசினர்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது;

Update: 2022-01-04 06:34 GMT

போளூர்‌ அரசினர்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்  

போளூர்‌ அரசினர்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர்‌ சுந்தர்‌ தலைமையிலான 8 பேர்‌ கொண்ட குழுவினர் மாணவிகளின்‌ உடல்‌ வெப்பநிலை பரிசோதனை மூலம்‌ கண்டறிந்து,பெற்றோர்‌ அனுமதி கடிதத்துடன்‌ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

மேலும் மாணவிகளிடம் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினர். இந்ந நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்‌ தாமரைச்செல்வி மருத்துவர்‌ பிரீத்தா மற்றும்‌ செவிலியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Tags:    

Similar News