சேத்துப்பட்டு ஒன்றிய குழு கூட்டம்!
சேத்துப்பட்டு ஒன்றிய குழு கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற “மக்களின் முதல்வர்” திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக முதல்வருக்கு, சேத்துப்பட்டு ஒன்றிய குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் மன்ற வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார். துணை தலைவர் முருகையன், ஆணையாளர்கள் செந்தில்குமார், இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 49 ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில், புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்களுடன் மக்களாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, தாயாக செயல்படுகின்றார். அவருக்கு இம்மாமன்றத்தில் நன்றிகளை தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும், தச்சம்பாடி ஊராட்சியில் குடிநீர் தொட்டியை அகற்றி ஒரு வருடம் காலம் ஆகின்றது. உடனடியாக, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் ஒன்றிய குழு தலைவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியர் தின விழா
சேத்துப்பட்டு ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில், ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. சேத்துப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் தெருவில் உள்ள உலக சமுதாய சேவை சங்க தலைமையகத்தில், ஓய்வுபெற்ற அலுவலர் சங்க சார்பில், ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் சுதா முருகன் தலைமை தாங்கினார். சேத்துப்பட்டு திமுக நகரச் செயலாளர், பேரூராட்சி மன்ற மூத்த உறுப்பினர் இரா.முருகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் மங்கலம் ரமேஷ், உலக சமுதாய சேவை சங்க இயக்குனர் மணி, வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரையும், ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் கோவிந்தன் வரவேற்றார். மாநில இணை செயலாளர் அப்பு சிவராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். வந்தவாசி கிளை தலைவர் தாஸ் நமச்சிவாயம், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முனிரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் லூர்து சாமி, மணி, கேசவன், இயேசு பாதம் சுரேஷ் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலாளர் முனியன் நன்றி கூறினார்.