சேத்துப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி டி.வி. மெக்கானிக் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மின்சாரம் தாக்கியதில் டி.வி.மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மேல தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் இளையராசு, (வயது 40). டிவி மெக்கானிக், இவரது மனைவி ரேவதி, (32), இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இளையராசு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மேல தாங்கல், கிராமத்தில் தகர சீட் வீட்டில் வசித்து வந்தார். தகர சீட்டில் செல்லும் மின்சார ஓயர் கசிந்து தகர சீட் முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது.
இதை அறியாத இளையராசு, மேலே உள்ள தகர சீட்டை தொட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி, மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் இளையராசுவை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு இளையராசுவைப் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் இதுகுறித்து இளையராசுவின், மனைவி ரேவதி, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி திருவண்ணாமலைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.