தாய் இறந்த சோகத்தில் ரயிலில் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
தாய் இறந்ததால் மனஉளைச்சலில் ரயிலில் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார், போலீசார் விசாரணை.;
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கிட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் கவுதம் குமார் (வயது25). இவருடைய தாயார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதிலிருந்து கவுதம்குமார் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் கடந்த ஒரு மாதமாகவே திருவண்ணாமலை அரசு மருத்துவமனைவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் போளூர் ரயில் நிலையம் யார்டில் மதியம் சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. கவுதம்குமார் திடீரென்று ரயில் முன் பாய்ந்துள்ளார். இதில் தலை வேறு, கை, கால், வேறு என துண்டு துண்டாக கவுதம் குமாரின் உடல் சிதறி உள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டார். பின்பு காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.