காரில் கஞ்சா கடத்தல்; 4 போ் கைது
போளூர் அருகே, காரில் கஞ்சா கடத்திச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.;
காரில், கஞ்சா கடத்திச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். (கோப்பு படம்)
போளூா் அருகேயுள்ள வசூா் கூட்டுச் சாலை வழியாக, காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், போளூா் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், எஸ்.ஐ.,க்கள் கோவிந்தன், சிவக்குமாா், செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, பதிவெண் இல்லாத காரில் 4 போ் செல்வதைப் பாா்த்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் போளூா் அல்லிநகரைச் சோந்த ஏழுமலை மகன் பாலகுமரன் (32), மாட்டுபட்டிதெரு கண்ணன் மகன் சுரேஷ் (39), வேங்கடத்தான் தெரு வீரமணி மகன் குமரேசன் (32), திருப்பத்தூா் மாவட்டம், பொம்மிகுப்பம் கிராமத்தைச் சோந்த ராதாகிருஷ்ணன் மகன் மூா்த்தி (49) என்பது தெரியவந்தது.
மேலும், அவா்கள் காரில் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, போலீசார் கஞ்சாவை கைப்பற்றி, காரை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனா்.
மேலும் இருவர் கைது
இதேபோல திருவண்ணாமலை-திண்டிவனம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 23), போளூர் சிவராஜ் நகர் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரத்குமார் (29) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1,250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.