சேத்துப்பட்டில் கிணற்றில் வியாபாரி உடல் கண்டெடுப்பு

சேத்துப்பட்டில் இரண்டு நாட்களாக காணாமல் போன வியாபாரி கிணற்றில் சடலமாக மீட்பு;

Update: 2021-12-23 07:22 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கடைத் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 57). வியாபாரியான இவர் 2 நாட்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் பாத்திமா தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவருடைய நிலத்தில் குருமூர்த்தி இறந்து கிடப்பதாக சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் கிடந்த குருமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி அளித்துள்ள புகாரில், கணவர் குருமூர்த்திக்கு நீச்சல் தெரியாது. எனவே அவர் தவறி விழுந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News