பல்வேறு இடங்களில் திருடிய மூன்று பேர் கைது

போளூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-28 11:42 GMT

பல்வேறு இடங்களில் திருடிய குற்றவாளிகளை கைது செய்த போலீசார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

போளூர் காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி தலைமையிலான போலீசார் போளூர் புறவழிச் சாலை திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த சாலையில் வந்த மூன்று பேர் போலீசை கண்டதும் வேகமாக ஓட முயன்றுள்ளனர்.

இதனை கவனித்த போலீசார் அந்த மூன்று பேரையும் துரத்தி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மூவரும் செங்கம் வட்டம் முன்னூா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சந்துரு, செங்கம் புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் பிரதீப், போளூா் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் ராஜாராம் என தெரியவந்துள்ளது.

மேலும், அவா்கள் போளூா் பகுதியில் பல்வேறு இடங்களிடம் வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னா், அவா்களிடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து வேலூா் சிறையில் அடைத்தனா்.

பெண்களிடையே தகராறு: 4 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவி, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடுகளை ஓட்டிக்கொண்டு தங்களது நிலத்துக்கு சென்று கொண்டிருந்தாராம் அப்போது வழியில் இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த தஞ்சமாலுக்கும் இடையே முன்விரதம் காரணமாக வாய் தகராறு ஏற்பட்டதாம்.

இதனைத் தொடர்ந்து தஞ்சம்மாள் மற்றும் அவரது மகன் ஏழுமலை ஆகியோர் சேர்ந்து தேவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த தேவி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தேவி அடிக்க புகாரின் பேரில் ஏழுமலை தஞ்சம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தெள்ளாறு போலீசார் ஏழுமலை மற்றும் தஞ்சம்மாள் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Similar News