திருவண்ணாமலை; கரைப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரம் பறிப்பு

முறைகேடு புகார் எதிரொலியாக கரைப்பூண்டி ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறித்து திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-19 05:35 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கரைபூண்டி கிராமத்தில் ஊராட்சி தலைவராக இந்திரா பாலமுருகன் பதவி வகித்து வந்தார். இவர் மீது 2-வது வார்டு உறுப்பினர் வேலு, 8-வது வார்டு உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் எழுத்து பூர்வ முறைகேடு புகாகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உத்தரவின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட ஊராட்சி செயலாளர் அறவாழி, செயற்பொறியாளர் கோவிந்தன் மற்றும் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகோபால், கோவிந்தராஜுலு ஆகியோர் கரைபூண்டி பஞ்சாயத்துக்கு சென்று அங்கு உள்ள பதிவேடுகள் மற்றும் ஊராட்சி நிதி குறித்து ஆய்வு செய்தனர். அப்போது முறைகேடுகள் தெரியவந்தது. 1-4-2021 முதல் 31-3-2022 வரை உள்ள பதிவேடுகள், கணக்குகள் குறித்து தலைவர் இந்திரா பாலமுருகனிடம் கேட்டபோது எந்தவித பதிலும் இல்லாததால் இதில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டருக்கு கூடுதல் கலெக்டர் பிரதாப்  முறைகேடு பற்றி அறிக்கை அனுப்பினார். இதனை தொடர்ந்து ஊராட்சி தலைவர் இந்திரா பாலமுருகன் அதிகாரம் பறிக்கப்பட்டு சேத்துப்பட்டு பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபாலை தனி அலுவலராக நியமித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News