திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக போளூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன் நியமித்து அரசாணை வெளியீடு.

Update: 2022-01-17 11:30 GMT

மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு பரம்பரை முறை  சாராத அறங்காவலர்கள் தேர்வு செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக போளூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.சேகரன்,  நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன், கலசபாக்கம் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ராஜன் தாங்கள் ஜெயபாரதி மணி, கீழ்பெண்ணாத்தூர் வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மாவட்ட செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலுவை,  நேரில் சந்தித்து அரசாணை உத்தரவை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News