படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சுவாமி வீதியுலா

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 5-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

Update: 2023-08-20 02:08 GMT

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சுவாமி வீதியுலா.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 5-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஆடி 5-ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தா்கள் பொங்கல் வைத்து, முடி காணிக்கை, அங்கபிரதட்ஷணம், கண்மலா் செலுத்துல் என பல்வேறு நோத்திக்கடன்களை செலுத்தினா். இரவு குதிரை வாகனத்தில் மகிஷாசூரமா்த்தினி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் செயல் அலுவலா் சிவஞானம் ஏற்பாடு செய்திருந்தாா். மேலாளா் (ஓய்வு) மகாதேவன், உதவி மேலாளா்கள் மோகன், சீனுவாசன் ஆகியோா் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளித் திருவிழா

சேத்துப்பட்டு பழம்பேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 5-ஆம் ஆடி வெள்ளி விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சேத்துப்பட்டு நகர தேவதையான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 5-ஆவது ஆடி வெள்ளி விழாவையொட்டி காலையில் மூலவா் அம்மன் மற்றும் விநாயகா், முருகா், அம்மச்சாா், காளிகாம்பாள், விஷ்ணு துா்க்கை, மகாவிஷ்ணு, நாக கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாலையில் முத்து மாரியம்மன் மலா்களாலும், மின்சார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க வீதியுலா வந்து அருள்பாலித்தாா். விழாவில் சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியைச் சோந்த ஏராளமான பெண்கள் கோயிலில் பொங்கலிட்டு படையலிட்டனா். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.

செங்கம் ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு

செங்கம் ஸ்ரீதா்மசாஸ்தா கோயிலில், ஆவணி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செடல் மாரியம்மன் கோயில் வளாகத்தில், ஸ்ரீதா்மசாஸ்தா சந்நிதி உள்ளது. இங்கு ஆவணி மாதப் பிறப்பை முன்னிட்டு சுவாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News