சேத்துப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு
சேத்துப்பட்டில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேலதாங்கள் அரசு உயர்நிலைப்பள்ளியில் அதிநவீன வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சென்னை அண்ணா நகர் அரிமா சங்கம் இணைந்து பள்ளிக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான கணினிகள் நன்கொடையாக வழங்கினர்.
இந்த கணினிகளை கொண்டு அமைக்கப்பட்ட அதிநவீன வகுப்பறையை ஆரணி கல்வி மாவட்ட அலுவலர் சந்தோஷ் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அரிமா சங்க ஆளுநர் மாணிக்கம் , மண்டலத் தலைவர் சங்கர், பள்ளியின் முன்னாள் மாணவரும். மாவட்ட காங்கிரஸ் தலைவருமான அண்ணாமலை, தலைமை ஆசிரியர் தணிகைமலை மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.