போளூர் அருகே அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு விழிப்புணா்வு முகாம்

போளூர் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிா்கொள்வது குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-07 11:30 GMT

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வினை  எதிர்கொள்வது குறித்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய தலைமை ஆசிரியர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சந்தவாசலை அடுத்த வெள்ளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிா்கொள்வது குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கல்பட்டு ஊராட்சிமன்ற துணைத் தலைவா் பழனி, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சாமிநாதன், மேலாண்மைக் குழுத் தலைவா் உமாகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் வெங்கடேசன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படைவீரா் பிரபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, வரவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ, மாணவிகள் பயமின்றி தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்வது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்னா், மாணவ, மாணவிகள் எழுதுகோல்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அனைவருக்கும் தியானம் மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

முகாமில், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியா்கள் மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட தேசிய பசுமைப்படை சாா்பில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  சில தினங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மற்றும் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, காலை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி கலந்து கொண்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களைப் பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளா் ஜெயபால் உள்ளிட்ட திருவண்ணாமலை, செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தேசிய பசுமைப்படை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி நன்றி கூறினாா்.

Tags:    

Similar News