போளூர் வட்டத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அவரது வீடு தேடி சென்றுவழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் இன்று (03.11.2021) மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், அவர்களின் தலைமையில் போளூர் கிராமத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பயனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது.
போளூர் வட்டம் போளூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பொதுமக்கள் மனு கொடுத்த ஒரு மணி நேரத்தில் 4 நபருக்கு முழு புல பட்டா மாறுதல்களும், 2 நபருக்கு நத்தம் முழு புல பட்டா மாறுதல், 4 நபருக்கு உட்பிரிவு மாறுதல்களும் , ஒரு நபருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த துரித நடவடிக்கையினால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த முகாமின் சிறப்பம்சமாக, மாற்றுத்திறனாளி பழனிபதி என்பவருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) அவரது வீடு தேடி சென்றுவழங்கினார் .
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், போளூர் வட்டாட்சியர் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார், வட்ட துணை ஆய்வாளர் சரவணன், மண்டல துணை வட்டாட்சியர், சிவலிங்கம், வருவாய் ஆய்வாளர் வேலுமணி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.