மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

போளூரில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-02 09:37 GMT

சிறப்பு மருத்துவ முகாமில், கலந்து கொண்ட குழந்தைகள்.

போளூரில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து, 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, மருத்துவ மதிப்பீட்டு முகாம், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமில் மனநல மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை சிகிச்சை மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து, மாற்றுத்திறன் குழந்தைகளை மதிப்பீடு செய்தனர்.

பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை,  இலவச பேருந்து பயண அட்டை,  பராமரிப்பு உதவித்தொகை  மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி வழங்கினார்.

இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்விழி,  வட்டார கல்வி அலுவலர்கள்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,  வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், போளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுதா, உதவியாளர்கள்,  தொண்டு நிறுவன நிர்வாகிகள்,  ஆசிரியர் பயிற்றுநர்கள்,  சிறப்பு பயிற்றுநர்கள், தசை பயிற்சியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News