போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்;
தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களும், தற்போதைய மாணவர்களும், ஆசிரியர்களும், ஆசிரியைகளும், சேர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் .
அதேபோல் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டாட்சியர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்.