செல்பியால் நேர்ந்த விபரீதம்: அருவியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

Dead News Today - அமிர்தி அருவியில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-06-13 04:36 GMT

Dead News Today - ஜவ்வாதுமலையின் மாவட்ட எல்லை பகுதியில் அமிர்தி சிறு வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு வெளியே உள்ள பகுதி ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். இந்த பூங்காவின் அருகில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இங்கு அடிக்கடி அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதால் இந்த அருவிக்கு செல்ல வனத்துறையால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த முக்தர்சி (வயது 21) என்பவர் 4 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் அமிர்தி வந்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே நிறுத்தி விட்டு யாருக்கும் தெரியாமல் வனப்பகுதி வழியாக அருவிக்கு நடந்து சென்றனர். அங்கு அவர்கள் உற்சாகமாக குளித்து உள்ளனர். அருவியின் மேல்பகுதியில் நின்றபடி 5 பேரும் செல்பி எடுத்ததாக தெரிகிறது.

இதில் எதிர்பாராத விதமாக கால் தவறி நீரில் விழுந்த முக்தர்சி புதை சேற்றில் சிக்கி மூழ்கினார். இதனால் திடுக்கிட்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். காப்பாற்ற முடியாததால் உடனடியாக அவர்கள் அமிர்தி வனச்சரக அலுவலகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறி அழுதனர். இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று நீரில் குதித்து சேற்றில் மூழ்கிய முக்தர்சி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முக்தர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News