வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது. அப்போது கலெக்டர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.
முன்னதாக முதல் கட்ட பயிற்சி நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் சார்பில் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டன
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் இவ்விரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத்தின் 12 இடங்களில் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு போளூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியை உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவு முறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வாக்கினை அஞ்சல் மூலமாக செலுத்த அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் வாக்கினை செலுத்தினர். அஞ்சல் வாக்கு செலுத்துதலின் போது ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போளூர் வட்டாட்சியர் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமுல், சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலா, துணை வட்டாட்சியர் சிவலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், நேர்முக உதவியாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், துணை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.