போளூர் அருகே விவசாயிகளுக்கு காரிப்பருவ பயிற்சி

வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு காரிப்பருவ பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-07-06 02:04 GMT

 விவசாயிகளுக்கு  நடைபெற்ற ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம்

சேத்துப்பட்டு உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தின் சார்பில் பெலாசூர் கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு காரிப் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது. சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பெலாசூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு காரிப் பருவ பயிற்சி 40 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மைதொழில்நுட்ப மேலாண்மை முகமை 2024 -25ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு காரிப் பருவ பயிற்சி பெலாசூர் கிராமத்தில் 40 விவசாயிகளைக் கொண்ட குழுவிற்கு அளிக்கப்பட்டது.

பயிற்சி முகாமில் வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் மத்திய அரசு திட்டம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பா, வேளாண்மை அலுவலர் முனியப்பன், துணை வேளாண்மை அலுவலர் ஏழுமலை காரிப் பருவத்தில் விதை தேர்ந்தெடுக்கும் முறைகள் பற்றியும் மண் பரிசோதனை செய்யும் முறைகள் பற்றியும் துணை வேளாண்மை இயக்குனர் உயிர் உரங்கலான பாஸ்போ பாக்டீரியா பயன்படுத்தும் முறைகள் பற்றியும், செயலி பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். மேலும் இப்ப பயிற்சியில் பெலாசூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர், உதவி வேளாண்மை அலுவலர் முருகன், உதவி தோட்டக்கலை அலுவலர், சரவணன் மற்றும் அத்மா திட்ட அலுவலர் சேகரன் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

உர நிர்வாகம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம்

போளூரை அடுத்த கல்குப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி தலைமை வகித்தார். துணை வேளாண் அலுவலா் ராமு, உதவி வேளாண் அலுவலா் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் தேவேந்திரன் வரவேற்றார்.

திரவ உயிரி உரங்கள் உற்பத்தி மைய வேளாண் அலுவலா் சவிதா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் திரவ உயிரி உரங்களை பயன்படுத்தும் முறைகள், விதை நோ்த்தி தொழில்நுட்பம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம், பி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண் இணைப்பு, உழவன் செயலி பயன்பாடு, பயிர் சாகுபடியில் நுண்ணூட்ட சத்துகளின் முக்கியத்துவம், நுண் சத்துகளின் செயல்பாடுகள், நுண்ணூட்ட உரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

உதவி தோட்டக்கலை அலுவலா் சுதாகா், அட்மா திட்டப் பணியாளா்கள் பாக்கியவாசன், லோகநாதன், டிவிஎஸ் தொண்டு நிறுவன அலுவலா்கள் பிரபு, சிவக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News