சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த கண்காட்சிக்கு, தலைமை ஆசிரியை பூங்காவனம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பங்கேற்று அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மாணவர்களின் அறிவியல் படைப்புகளான நீர் சுழற்சி, காற்றாலை மின்சாரம், சூரிய மின்சாரம், இந்திய நறுமண பொருள்கள், நீர்,நில, ஆகாய வழிப் போக்குவரத்து, இயற்கை உணவு , போன்றவற்றை பார்வையிட்டு அவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி பாட்டு பாடி மாணவர்களை ஊக்கப் படுத்தினார். வட்டார கல்வி அலுவலர் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.