ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கொளக்கரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.;

Update: 2022-04-13 06:46 GMT

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை கையாண்ட மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் வேலு பரிசுகளை வழங்கினர்.

சேத்துப்பட்டு ஒன்றியம் கொளக்கரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனை சேத்துப்பட்டு வட்டார கல்வி அலுவலர் க.வேலு, கண்காட்சி தொடங்கி வைத்தார்.

இதில் ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணம்மா, ஆசிரியை சகாய செல்வி, ராணி, அமலா, செல்வி மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளை கையாண்ட மாணவ மாணவிகளுக்கு வட்டார கல்வி அலுவலர் வேலு பரிசுகளை வழங்கினார்.

Tags:    

Similar News