மயான பாதை பிரச்சினைக்கு அதிகாரிகள் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை
சேதரம்பட்டு கிராமத்தில் மயான பாதை பிரச்சினைக்கு அதிகாரிகள் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.;
மயான பாதை பிரச்சினைக்கு அதிகாரிகள் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
போளூர் தாலுகா சேதரம்பட்டு மற்றும் முனியன்குடிசை கிராம பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நிலவி வரும் பிரச்சினை தொடர்பாக தாசில்தார் தலைமையில் கடந்த 20-ந் தேதி சமாதான கூட்டம் நடைபெற்றது.
இதனிடையே நேற்று பானுமதி என்பவர் மரணம் அடைந்ததை முன்னிட்டு மயானத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக அசாதாரண சூழல் நிலவியது.
இதையடுத்து இன்று போளூர் தாசில்தார் சண்முகம் தலைமையில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், களம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இருதரப்புக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் இறந்தவர் உடலை ஏற்கனவே பயன்படுத்தி வந்த ஓடை புறம்போக்கு வழியாக கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பில் எவ்வித பிரச்சினை இல்லாமல் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதை வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.