போளூர் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம்
போளூர் பள்ளியில், சாரண சாரணியர் இயக்கம் சார்பில், ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது.;
சாரண சாரணியர் இயக்கம் சார்பில், போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது.
சாரண சாரணியர் இயக்கம் சார்பில் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ராஜ்ய புரஸ்கார் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது. போளூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த போளூர்,கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த சாரண சாரணிய இயக்கத்தின் ஏற்பாட்டின் பேரில் மாநில ஆளுநர் விருதுக்கான சோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், சாரண சாரணியர் களுக்கு இறை வணக்கம் பாடல், கொடி பாடல், தேசிய கீதம், சாரண சாரணியர் சட்டம் உறுதிமொழி, கொடி வணக்கம் செலுத்தும் முறை, குறிக்கோள், முதலுதவி, தள வரைபடம் என பல்வேறு தலைப்புகளில் தேர்வுகளில் செயல்முறை, மதிப்பீடும் நடைபெற்றது.
முதன்மைக் கல்வி அலுவலர் பியூலா கரோலின், தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், சாரண சாரணிய பிரிவுகளில் உதவி தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.