சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியல்
போளூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள அப்துல் குத்தூஸ் தெருவில் தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, பேரூராட்சி செயல் அலுவலா் முஹம்மத் ரிஜ்வான், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி ஆகியோரிடம் அப்துல் குத்தூஸ் தலைமையில் தெருவாசிகள் மனு அளித்தனராம். ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியைச் சோந்த கோவிந்தசாமி மகன் மணி தலைமையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.தகவல் அறிந்த காவல் ஆய்வாளா் ஜெயப்பிரகாஷ் வந்து ஆக்கரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினாா்.இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.