அரசு மகளிர் பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பு
தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் பள்ளியை தரம் உயர்த்த பொதுமக்கள் தங்கள் பங்களிப்பு தொகையை வழங்கினர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியாக ரூபாய் இரண்டு லட்சம் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கப்பட்டது.
இந்த பள்ளியில் தமிழ் ஆங்கில வழி என இரு மொழிகளிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 750 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்களின் பங்களிப்பு நிதியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் பெரியநாயகி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான மீனாட்சிசுந்தரம் தலைமையில் பொதுமக்கள் ரூபாய் 2 லட்சத்தை பள்ளித் தலைமையாசிரியர் சரவணனிடம் வழங்கினார்கள்
ஊராட்சி தலைவர் வெங்கடேசன் ,கல்வி மேலாண்மை குழு தலைவர் பிச்சாண்டி, பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் உடன் இருந்தனர்.