சேத்துப்பட்டு பகுதியில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சேத்துப்பட்டு அடுத்த இயேசு ஊரில் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2022-05-18 14:09 GMT

தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் தேசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் , வீட்டைச்சுற்றி குப்பை கூளங்கள் போடுவதை அப்புறப்படுத்துவது, தேவையற்ற டயர்கள்,  தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடு, தண்ணீர் தொட்டி ஆகியவற்றில் கொசுப்புழு வளர்ச்சியை தடுப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.  மேலும் காய்ச்சல் கண்டவுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நிலவேம்பு குடிநீர் பருகுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்கலாம் என்று வலியுறுத்தப்பட்டது. பின்னர் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஷா, சுகாதார ஆய்வாளர் கணேஷ்குமார் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News