ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம்
சேத்துப்பட்டு மின்வாரிய கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.;
சேத்துப்பட்டு மின்வாரிய கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டில், மின்வாரியத்தை பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதனையடுத்து, ஊர்வலமாக சென்று மின்வாரிய அதிகாரியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மனு கொடுக்கும் இயக்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அரசு, , மத்திய அரசின் மோசடி திட்டத்தை அமல்படுத்தாதே…! மீட்டர் என்கிற பெயரில் பெரு முதலாளிகளின் லாப வேட்டைக்கு அனுமதிக்காதே! ஏழை-எளிய மக்களின், விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறிக்காதே! என முழக்கங்கள் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியபடி, வட்டார செயலாளர் எல்லப்பன் தலைமையில் போளூர் சாலை, செஞ்சி சாலை வழியாக மின்வாரிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக, கண்டன முழக்கங்களை எழுப்பியபடி நடந்து சென்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகரன், செல்வன் ஆகியோர், விளக்க உரையாற்றி தங்களுடைய மனுவை உதவி செயற்பொறியாளரிடம் சமா்ப்பித்து, தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க கோரப்பட்டது.
நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு, பெரணமல்லூரைச் சேர்ந்த வட்டார தலைவர்கள் பெருமாள், ராஜேந்திரன் மற்றும் அண்ணாமலை, தங்கமணி, செல்வராஜ், சுந்தரமூர்த்தி, சாந்தி, ராஜசேகரன், முருகன், சரஸ்வதி, அறிவழகன், பிரபாகரன், கௌரவமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேத்துப்பட்டு வட்டாரச் செயலா் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.