கணினி மயமாக்கப்பட்ட மார்க்கெட் கமிட்டிகளில் 87ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
கணினி மயமாக்கப்பட்ட மார்க்கெட் கமிட்டிகளில் 87 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று, கமிட்டி செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 கணினி மயமாக்கப்பட்ட மார்க்கெட் கமிட்டிகளில் 87 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் இது கூடுதலாகும் என, மாவட்ட மார்க்கெட் கமிட்டி செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி செயலாளர் சந்திரசேகரன் , சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியை பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக அரசு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கணினி மயமாக்கப்பட்டு, மின்னணு அணு தேசிய வேளாண் சந்தை என அமைத்து விவசாயிகளின் விளை பொருட்கள் மின்னணு எடை மூலம் வியாபாரிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வங்கிகள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
மின்னணு சந்தை மூலம் விவசாயிகளுக்கு உரிய விலையானது கூடுதலாக கிடைக்கின்றது எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி மயமாக்கப்பட்டசேத்துப்பட்டு, செய்யார், வந்தவாசி, தேசூர், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர் போளூர் ஆகிய 8 மையங்களில் நடப்பு ஆண்டு ஏப் 1முதல் ஜூலை 30முடிய 4 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்துகொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாகும். தற்போது நீண்ட நாள் பயிரான பொன்னியை விட சன்னரகமான ஆர்என்ஆர் மகேந்திரா போன்ற நெல் வகைகளை விவசாயிகள் பயிர் செய்கின்றனர். இப்பயிர் குறுகிய கால பெயர் எனவே தற்போதைய கார் பருவத்தில் விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை அறுவடை செய்து மார்க்கெட் கமிட்டிகளுக்கு கொண்டு வருகின்றனர்.
அளவுக்கு அதிகமாக கொண்டு வருவதால் மார்க்கெட் கமிட்டிகளில் இடம் பற்றாக்குறை ஏற்படுகிறது. வெட்ட வெளியில் வைப்பதால் விவசாயிகளின் விலைப் பொருளான நெல் இயற்கை சீற்றத்தில் மழையில் நனைந்து சேதம் அடையலாம். எனவே அந்தந்த பகுதியில் உள்ள மார்க்கெட் கமிட்டி நிர்வாகம் அறிவிப்பை ஏற்று விற்பனைக்கு கொண்டு வாருங்கள்.
நெல்களை பக்குவப்படுத்தி கொண்டு வந்தால் தற்போது விலையை விட அதிக விலை கிடைக்கும். காவிரி டெல்டா பகுதியில் கூட ஒரு போகம் தான் பயிற்சி செய்கின்றனர். ஆனால் நம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 போகமும் நெல் பயிர் செய்யப்படுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் தினேஷுக்கு கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, விவசாயிகளுக்கு சிறப்பாகபணியாற்றியமைக்காக மாவட்ட கலெக்டர் முருகேஷ் வழங்கிய சான்று மற்றும் நினைவு பரிசைப் பெற்றமைக்கு மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.